தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மணப்பாறையில் ரூ.1 லட்சம் ரொக்கம் பறிமுதல் - Election flying squad

திருச்சி: மணப்பாறையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில், வேனில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட 1 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம்

By

Published : Mar 24, 2019, 7:21 PM IST

திருப்பூர் மாவட்டம் பொங்களூரைச் சேர்ந்த கோவிந்தராஜன் என்பவர், சனிக்கிழமை திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சுமார் 40 கறிக்கோழி விற்பனை கடைகளுக்கு கோழிகளை விற்பனை செய்துள்ளார். அதன் வசூல் தொகையான ரூ.1,02,600 எடுத்து கொண்டு கோழிகள் ஏற்றி வந்த மினி சரக்கு வேனில் பல்லடம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது மணப்பாறை – விராலிமலை சாலையில் சோதனையில் ஈடிபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர், கோழி வேனை மடக்கி சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணமின்றி ரொக்கம் எடுத்து செல்லப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்து மணப்பாறை வருவாய் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details