திருச்சி:மணப்பாறை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆண்டவர் கோயில் சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே திண்டுக்கல் நோக்கி சென்ற TN 49 BR 7089 என்னும் எண் கொண்ட கனரக வாகனத்தை நிறுத்திச் சோதனை மேற்கொண்டபோது வாகனத்தில் ஒரு லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டது.