முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திருச்சி மாவட்டம் தொட்டியம், முசிறி, துறையூர் ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “ அதிமுகவில் குழப்பத்தை விளைவிக்க ஸ்டாலின் முயல்கிறார். ஓராயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுகவை தொட்டுப் பார்க்க முடியாது. ஸ்டாலின் வந்த வழி வேறு, நான் வந்த வழி வேறு. கிளைச் செயலாளராக இருந்து முதலமைச்சராக வந்திருக்கிறேன் என்றால் எத்தனை உழைப்பு தேவை. ஸ்டாலின் குறுக்கு வழியில் வந்தவர். என்னைப்போல் கஷ்டப்பட்டிருந்தால் அதன் அருமை தெரியும்.
’ஸ்டாலினுக்கே இத்தனை வலு என்றால் எனக்கு எத்தனை வலு இருக்கும்’ - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
திருச்சி: அதிமுகவில் குழப்பம் விளைவிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இரவல் காலில் நிற்கும் ஸ்டாலினுக்கே இத்தனை வலு என்றால், சொந்தக் காலில் நிற்கும் எனக்கு எத்தனை வலு இருக்கும். அதிமுக என்பது இரும்புக் கட்சி. ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். எதிர்க்கட்சியாக இருக்கும் ஸ்டாலினுக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. வெளிமாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒருவர் எழுதிக் கொடுப்பதை பேசுபவர் ஸ்டாலின் “ என்று குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க:முதலமைச்சர் தேர்வு, நடிகர்கள், விளையாட்டு வீரர் இணைப்பு : என்ன நடந்தது பாஜக ஆலோசனைக் கூட்டத்தில்?