தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பழுதாகி நின்ற லாரி மீது மோதிய சரக்கு வேன்: ஓட்டுநர் மகன் பலி - Trichy-Madurai National High way accident

திருச்சி: திருச்சி–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற நிலக்கரி ஏற்றிச்சென்ற லாரி மீது, சரக்கு வேன் மோதியதில் லாரி ஓட்டுநரின் மகன் உயிரிழந்தார்.

லாரி மீது சரக்கு வேன் மோதியதில் ஓட்டுநர் மகன் உயிரிழப்பு
லாரி மீது சரக்கு வேன் மோதியதில் ஓட்டுநர் மகன் உயிரிழப்பு

By

Published : Apr 16, 2021, 8:03 PM IST

தூத்துக்குடியிலிருந்து நெய்வேலி நோக்கி நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி ஒன்று பஞ்சராகி, திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகேயுள்ள திருச்சி–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டு இருந்துள்ளது.

அப்போது, அவ்வழியே திருநெல்வேலியிலிருந்து சென்னை நோக்கி பழங்கள் ஏற்றி வந்த சரக்கு வேன் ஒன்று, அங்கு நின்றுகொண்டிருந்த நிலக்கரி லாரியின் பின்பகுதியில் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

லாரி மீது சரக்கு வேன் மோதி விபத்து

இதில், சரக்கு வேன் ஓட்டுநரான திருநெல்வேலி சாலியத்தெருவைச் சேர்ந்த சபரிராஜின் வலது கண், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதே வண்டியில் தந்தைக்கு உதவியாகச் சென்ற அவரது மகன் சிம்சனுக்கு (26) இடுப்புப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்குச் சென்ற காவல் துறையினர் இருவரையும் மீட்டு, துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் படுகாயமடைந்த சிம்சன், மருத்துமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் உடர்கூராய்வுக்காக மணப்பாறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சபரிராஜ் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

இந்த விபத்து குறித்து நிலக்கரி ஏற்றிவந்த லாரி ஓட்டுநர், திருநெல்வேலியைச் சேர்ந்த சுடலைமணி ஆகியோர் அளித்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த துவரங்குறிச்சி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 'காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு!'

ABOUT THE AUTHOR

...view details