திருச்சி:மணப்பாறை அடுத்த சமுத்திரம் கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக காவிரி குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால், கொந்தளித்த அப்பகுதி பெண்கள் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் இன்று (ஜூலை 10) அவ்வழியாக சென்ற அரசு பேருந்தை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
சீரான குடிநீர் வினியோகம் செய்ய கோரிக்கை இதனையடுத்து அங்கு சென்ற மணப்பாறை காவல்துறையினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததையடுத்து சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
எம்.பி, எம்.எல்.ஏ, உள்ளாட்சி நிர்வாகம் என எல்லா துறையினர் இருந்தும் அடிப்படைப் பிரச்சினைக்காக தாங்களே சாலைக்கு வந்து போராட வேண்டிய நிலை உள்ளதாக கூறி பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: குளச்சலில் கடல் சீற்றத்தால் சேதமடைந்த துறைமுக பாலம்