தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'திமுக ஆட்சி அமைந்த 3 மாதங்களில் மக்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு’ - மகேஷ் எம்எல்ஏ - அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்திகள்

திருச்சி: மக்கள் கிராம சபை கூட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கைகளுக்கு திமுக ஆட்சி அமைந்த மூன்று மாதங்களில் தீர்வு காணப்படும் என்று எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதியளித்தார்.

திமுக ஆட்சி அமைந்த மூன்று மாதங்களில் மக்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு: எம்எல்ஏ மகேஷ்
திமுக ஆட்சி அமைந்த மூன்று மாதங்களில் மக்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு: எம்எல்ஏ மகேஷ்

By

Published : Jan 19, 2021, 12:59 PM IST

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் திமுக திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், திருவெறும்பூர் சட்டப்பேரவை உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (ஜன. 19) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அதில், “அதிமுகவை நிராகரிப்போம் என்று திமுக நடத்திய மக்கள் கிராம சபை நிகழ்வுக்கு மக்கள் மத்தியில் அதிக அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 16 ஆயிரம் இடங்களில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆயிரத்து 600 திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதுவரை ஒரு கோடி பேர் அதிமுகவை நிராகரிப்போம் என்று கையெழுத்திட்டுள்ளனர். அதிமுகவை நிராகரிப்போம் என்று அவர்கள் கையெழுத்திட்டு இருப்பதன் மூலம் திமுகவிற்கு ஆதரவு அளிப்போம் என்பதையே எடுத்துக்காட்டுகிறது.

கிராமசபை கூட்டங்களில் ரேஷன் பொருள்கள் சரிவர கிடைப்பதில்லை, சுடுகாட்டிற்கு வழியில்லை, குடியிருக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லை போன்று அதிக அளவில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதேபோல் 2019ஆம் ஆண்டு திமுக சார்பில் ஊராட்சிகளில் திமுக சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் அந்தந்த மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி, நகராட்சி ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் ஒரு சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. மீதமுள்ளவை நிறைவேற்றப்படவில்லை. அப்போது மக்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சி தான் நாடாளுமன்ற தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற காரணமாக அமைந்தது” என்றார்.

மேலும், “திருச்சி தெற்கு மாவட்டத்தில் 156 இடங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் 16 இடங்களில் நேரடியாக நான் கலந்து கொண்டேன். ஒவ்வொரு கூட்டத்திற்கும் 250 முதல் 300 பேர் சராசரியாக கலந்து கொண்டனர். இந்த கூட்டங்களில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் ஆவணமாக தயாரிக்கப்பட்டு திமுக தலைவர் ஸ்டாலின் வசம் ஒப்படைக்கப்படும். அடுத்து திமுக ஆட்சி வந்த மூன்று மாத காலத்தில் இந்தத் கோரிக்கைகளில் முக்கியத்துவமும் அடிப்படையில் நிறைவேற்றப்படும். தற்போதும் இந்த கோரிக்கை ஆவணங்கள் மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி, நகராட்சி ஆணையரிடம் வழங்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க...‘அப்பாவிற்கு அறுவை சிகிச்சை முடிந்து நலமாக இருக்கிறார்’ -கமல் ஹாசன் மகள்களின் அறிக்கை

ABOUT THE AUTHOR

...view details