திருச்சி: மொழிப்போர் தியாகிகளின் நினைவு நாளை முன்னிட்டு திமுக சார்பில் திமுகவினர் நினைவிடத்தில் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மொழிப்போர் தியாகிகளின் நினைவு நாளையொட்டி, தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள கழக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப் படத்திற்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தியாகிகள் நினைவேந்தல்
இதன் தொடர்ச்சியாக மேலும், தென்னூர் உழவர் சந்தையிலுள்ள தியாகிகளின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.