திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக கட்சிக் கொடிக்கம்பங்களைக் கட்சி நிர்வாகிகள் இன்று (மார்ச் 2) அகற்றியுள்ளனர்.
அப்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக் கொடிக்கம்பம் உயர் அழுத்த மின் கம்பியில் உரசியுள்ளது. இதில் புத்தாநத்தம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த திமுக பிரமுகர் ரசீத்அலி (32) மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டார்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகிலிருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அதனைத் தொடர்ந்து ரஷீ அலியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
கட்சிக் கொடிக்கம்பம் அகற்றியபோது விபத்து இதையடுத்து புத்தாநத்தம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க...புகார் அளிக்காமலிருக்க பெண் எஸ்பியின் காலில் விழுவதாக கூறிய டிஜிபி