தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றிவிடுவார்களோ என்று அஞ்சும் அதிமுக' - dmk kn nehru press meet

வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றி விடுவார்களோ என்று அதிமுகவினர் அஞ்சுகிறார்கள். அதனால்தான் கிராம சபைக் கூட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ளது என்று திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு கூறினார்.

dmk kn nehru press meet
dmk kn nehru press meet

By

Published : Oct 3, 2020, 1:38 AM IST

திருச்சிராப்பள்ளி: வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிவிடுவார்களோ என்ற அச்சத்தில்தான் கிராம சபைக் கூட்டத்திற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று கே. என். நேரு கூறியிருக்கிறார்.

கரோனா பரவல் காரணமாக காந்தி ஜெயந்தி நாளான நேற்று (அக்டோபர் 2) கிராம சபைக் கூட்டங்கள் ரத்துசெய்யப்பட்டன. இச்சூழலில் திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் அளுந்தூர், அந்தநல்லூர் ஒன்றியம், கரும்பூர் ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு மக்களைச் சந்தித்தார்.

அங்கு காத்திருந்த விவசாயிகளிடம் கே.என். நேரு, வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார். அந்தச் சட்டத்தால் விவசாயம் பெருநிறுவனங்களின் வசம் சென்றுவிடும். விவசாயமும், விவசாயிகளும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என அவர் பேசினார்.

பின்னர் கே.என். நேரு செய்தியாளர்களிடம் கூறும்போது, “கிராம சபைக் கூட்டம் நடத்தினால்தான் மக்கள் தங்களின் குறையை தெரிவிக்க முடியும். வேளாண் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றிவிடுவார்களோ? என்கிற அச்சத்தால்தான் கிராம சபைக் கூட்டத்தை அரசு நடத்தவில்லை. தமிழ்நாடு மக்களும், விவசாயிகளும் மத்திய அரசின் சட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கு இந்தக் கூட்டம்தான் சாட்சி” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details