வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திவருகின்றனர். அதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின், டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய, மாநில அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில், இன்று(டிச. 05) திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, திருச்சியில் திமுக மாவட்டச் செயலாளர்கள் வைரமணி, மகேஷ் பொய்யாமொழி, காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது.