திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் நடைபெற்றது. திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில் நடைபெற்ற இந்த நேர்காணலில் திருச்சி தெற்கு, வடக்கு மாவட்டத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக கலைஞர் அறிவாலயம் வாயிலில், செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், " உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் நாங்கள் வெற்றி பெறுவோம். உள்ளாட்சி தேர்தலை தடுக்க வேண்டும் என்று திமுக நினைக்கவில்லை. முறைப்படி நடத்துங்கள் என்று தான் கூறுகிறோம்" என்றார்.