திருச்சி மாவட்டம் சிறுகனூரில் திமுக 11ஆவது மாநில மாநாடு நடைபெறவுள்ளது. அதற்கான பணிகள் இன்று தொடங்கியது. திமுக முதன்மை செயலாளர் கே.என். நேரு இன்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், திமுக மாவட்ட செயலாளர்கள் காடுவெட்டி தியாகராஜன், வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மு ராஜேந்திரன், அவைத்தலைவர் அம்பிகாபதி உள்பட ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டனர்.