திருச்சி:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் கடைசி நாளான நேற்று (பிப்.4) திமுக, அதிமுக, பாஜக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்டுகள், மதிமுக காங்கிரஸ் மற்றும் சுயேச்சைகள் எனப் பலரும் வேட்பு மனு செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் (பிப்.3) வரை 334 பேர் நகராட்சியிலும், 403 பேர் பேரூராட்சிகளிலும் என 521 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
ஓரம்போ ஓரம்போ கேப்டன் வண்டி வருது இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் நாள் என்பதால் போட்டி வேட்பாளர்களும் கூடி வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
கோ. அபிஷேகபுரம் கோட்டத்திற்கு உள்பட்ட 54, 55, 57ஆவது வார்டுகளில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்கள் வெங்கடேசன், செல்வம், அலெக்ஸ் ஆகிய மூவரும் சட்டையில் பட்டை நாமம் போட்டு மாட்டு வண்டியில் நீதிமன்ற எம்ஜிஆர் சிலையில் இருந்து ஊர்வலமாக வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனர்.
காவல்துறையினர் மாட்டு வண்டியில் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் அரசு தலைமை மருத்துவமனை அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் காவல்துறையினர் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கோ அபிஷேகபுரம் கோட்டம் வரை மாட்டு வண்டியில் செல்ல அனுமதித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க:Urban Local Body Election: 'நான் தம்பிகளுக்கு எல்லாம் ஆச்சி' - 75 வயதில் வேட்பு மனு தாக்கல் செய்த நாதக உறுப்பினர்