தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மணப்பாறை அருகே பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் - சென்னப்பசுவாமி

மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டியில் ஆடிமாத திருவிழாவையொட்டி, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வினோத நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது

மணப்பாறை அருகே பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வினோத நேர்த்திக்கடன்
மணப்பாறை அருகே பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வினோத நேர்த்திக்கடன்

By

Published : Aug 13, 2022, 7:55 PM IST

திருச்சி:மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டியில் குரும்பர் இன மக்கள் கொண்டாடிய திருவிழாவில் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டு வினோத நேர்த்திக்கடன் செய்யப்பட்டது. ஆண்டுதோறும் ஆடி மாதத்தை முன்னிட்டு குரும்பர் இனமக்கள் தங்களது தெய்வங்களான சென்னப்பசுவாமி, மகாலெட்சுமி அம்மாள், பீரேஷ்வரசுவாமி (சிவபெருமாள்), அகோர வீரபத்திரசுவாமி, ஏழு கன்னிமார்கள், பாப்பாத்தி அம்மன், காவேரியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு விழா எடுத்து நடத்துவது வழக்கம்.

மணப்பாறை அருகே பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

அந்த வகையில் இன்று (ஆக 13) விழா நடந்தது. இந்த விழாவில் வேண்டுதல் வைத்திருந்த ஆண், பெண் பக்தர்கள் தங்களது தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து பொங்கல் படையல், அபிஷேக ஆராதனைகள், கரகம்-பூஞ்சோலை நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த விழாவில் 41 கிராமங்களைச் சேர்ந்த குரும்பர் இன மக்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: மறுபிறவி வேண்டி அருந்ததி பட பாணியில் தீக்குளித்து பலியான இளைஞர்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details