திருச்சி:மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என வலியுறுத்தி அமமுக பொதுச்செயலாளர் TTV தினகரன் தலைமையில் சிந்தாமணி அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்டச் செயலாளர் மனோகரன், ராஜசேகரன், சாருபாலா தொண்டைமான் உள்ளிட்ட அமமுக நிர்வாகிகள் மற்றும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேகதாது விவகாரத்தில் வஞ்சனை
இக்கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசுகையில், 'நமது பொது மக்களின் பிரச்னை; காவிரி பிரச்னை மட்டுமல்ல. இதில் இதர மாவட்டங்களின், குடிநீர் பிரச்னையும் அடங்கியிருக்கிறது. கர்நாடகா, உச்ச நீதிமன்றத்தை மதிப்பதில்லை. ஒரு எதிர்ப்பான ஆட்சியை தெளிப்பான் ஆட்சியை செய்துவருகிறது. உச்ச நீதிமன்றத்தை மதிக்காமல் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அண்டை மாநிலமான கர்நாடகா, தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் அளவிற்குத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இதை மத்திய அரசாங்கம் முடிவிற்குக் கொண்டுவர வேண்டும்.
தமிழ்நாட்டை ஆளுகின்ற திமுகவும், மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு அணை கட்டும் எண்ணத்தையே முழுமையாக அழிக்க வேண்டும். கலைஞர் ஆட்சியில் இருக்கும்போது, கிளைமா வகையில் அணை கட்டுவதற்கு எந்தவித மறுப்பும் கிடையாது என்று பச்சைக்கொடி காட்டினார். அப்போது இருந்த இந்திரா காந்திக்கு அஞ்சிக்கொண்டு உச்ச நீதிமன்றத்தில் இருந்த வழக்கைத் திரும்பப் பெற்றார். திமுக அரசு பொதுமக்களை வஞ்சித்து வருகிறது.