திருச்சி: டிவிஎஸ் டோல்கேட் பகுதியிலுள்ள மத்திய மண்டல ஐஜி அலுவலகத்தில், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு நேற்று (டிசம்பர் 22) செய்தியாளரைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "2017ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பல்வேறு மாவட்டங்களிலிருந்த அனைத்து சிலைத் திருட்டு வழக்குகளும், சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. அவ்வாறு மாற்றம் செய்யப்பட்டபோது, சில வழக்கு கோப்புகள் காணாமல்போனதாகப் புகார் எழுந்தது.
வழக்கின் கோப்புகள் தொலைந்தும் நடவடிக்கை
அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி காவல் நிலைய குற்ற எண் 192 / 1992 வழக்கு கோப்பு எங்குத் தேடியும் கிடைக்காத காரணத்தால், சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவில் கோயில் அர்ச்சகரிடம் புதிதாகப் புகார் பெற்று புதிய வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
கோப்பு கிடைக்காமல் புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட இந்த வழக்கில், தனிப்படை அமைக்கப்பட்டது.