தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கிணற்றில் மூழ்கிய இளைஞர் சடலமாக மீட்பு - tragic incident at trichy

நண்பர்களுடன் குளிப்பதற்காக கிணற்றிற்கு சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிணற்றில் மூழ்கிய வாலிபர் சடலமாக மீட்பு
கிணற்றில் மூழ்கிய வாலிபர் சடலமாக மீட்பு

By

Published : Dec 20, 2021, 12:35 PM IST

திருச்சி: மணப்பாறை அடுத்த பெருமாம்பட்டி தகர களத்தைச் சேர்ந்தவர் ரவி (எ) சடையன். இவரது மகன் நாகராஜ் (24). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து குளிப்பதற்காக கிணற்றிற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றிற்குள் சென்ற நாகராஜ் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், அவரது நண்பர்கள் அருகில் இருந்தவர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினரும், காவல் துறையினரும் மின்மோட்டார்களின் உதவியுடன் நீரை வெளியேற்றி எட்டு மணி நேரத்திற்குப் பின்பு சடலத்தை மீட்டுள்ளனர்.

கிணற்றில் மூழ்கிய வாலிபர் சடலமாக மீட்பு

பின்னர், மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு நாகராஜின் உடலை உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:பழமையான பள்ளிக் கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

ABOUT THE AUTHOR

...view details