மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு புரெவி மற்றும் நிவர் புயல் காரணமாக கடந்த ஆண்டுகளில் விவசாயம் பாதிக்கப்பட்டது.
பயிர் காப்பீடு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம் - crop insurance
தரங்கம்பாடி அருகே பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தி தரிசு நிலத்தில் கருப்புக் கொடி நட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் 2020 - 2021 ஆம் ஆண்டுக்கான பயிர்காப்பீட்டுத் தொகை இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. இதனால் விவசாயிகள் நடப்பு ஆண்டுக்கான குறுவை சாகுபடி துவங்க முடியாமல் பணப்பற்றாக்குறையால் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், யிர் காப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தி தரங்கம்பாடி தாலுக்கா சேத்தூர் கிராமத்தில் விவசாயிகள் தரிசு நிலத்தில் கருப்புக் கொடியை நட்டு வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.