திருச்சி: மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தட்சிணாமூர்த்தி உருவப்பட திறப்பு விழாவும், எஃப். கீழையூரில் அலுவலகத் திறப்பு விழாவும் நேற்று (செப்.16) நடைபெற்றது. இதில், கலந்துகொள்வதற்காக மணப்பாறை வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன்னதாக செய்தியாளரைச் சந்தித்தார்.
அப்போது, "மோடி தலைமையிலான கூட்டம் நடைபெற்றால் ஏதோ ஒரு பொதுத் துறையை விற்க நடைபெறுகின்ற கூட்டமாகத்தான் இருக்கின்றது.
கறுப்புக் கொடி போராட்டம்
சமூக நீதிக்கான அரசாக திமுக அரசு திகழ்வது, பேரவைக் கூட்டம் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கக் கூடாது, திருத்தப்பட்ட வேளாண் சட்டம் உள்ளிட்ட 19 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 20ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் வீட்டின் முன் கறுப்புக் கொடி போராட்டம் நடைபெறவுள்ளது.