திருச்சிராப்பள்ளி: கார்ல் மார்க்ஸ்ஸின் நண்பன் ஏங்கல்ஸ்ஸின் 200ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அவரின் படத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மலர் தூவிமரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து முத்தரசன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல் என இறுதியில் ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்கிற சர்வாதிகார நிலைக்கு நாட்டை கொண்டு செல்ல மத்திய பாஜக தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இது நாட்டிற்கும், ஜனநாயகத்திற்கும் ஆபத்து. இதை முறியடிக்கக் கூடிய வகையில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து போராட முன்வர வேண்டும். இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள், ஒரு போதும் மக்களின் இழப்பை ஈடுசெய்யாது. அடிப்படையில் செய்ய வேண்டிய பாதுகாப்பு அம்சங்களை, அரசு முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும்.