திருச்சி:மணப்பாறை அடுத்து சீகம்பட்டி ஊராட்சியில் முக்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் மானிய இடம் சோலைப்பட்டி, பொன்சங்கிப்பட்டி, இராயன்பட்டி, சீகம்பட்டி, வடக்கிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர்.
இந்நிலையில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகக் கோயில் இடத்தில் வசித்துவருபவர்களுக்குக் குடிமனை பட்டா வழங்கலாம் என விதி எண் 318இன்கீழ் 2019 ஆகஸ்ட் 30 அன்று அன்றைய அதிமுக அரசு பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில் கோயில் மானிய இடத்தில் வசித்துவந்த இருபத்து ஆறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு குடிமனைப் பட்டா வழங்கிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில் நவம்பர் 30ஆம் தேதிக்குள் வீடுகளைக் காலி செய்யக்கோரி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதனடிப்படையில் மணப்பாறை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் நீதிமன்ற உத்தரவுப்படி குடியிருப்புகளைக் காலி செய்யுமாறு கூறியுள்ளார். ஆனால் அவர்கள் அதற்குச் சம்மதிக்க மறுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உதவியோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
சென்ட் பட்டா நிலம்கூட இல்லை