தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திருச்சி இளைஞர்களுக்கு அல்கொய்தா இயக்கத்துடன் தொடர்பா? என்ஐஏ விசாரணை - என்ஐஏ அலுவலர்கள் விசாரணை

திருச்சி: அல்கொய்தா இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இருவரிடம் தேசிய புலனாய்வு பிரிவு அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

என்ஐஏ விசாரணை
என்ஐஏ விசாரணை

By

Published : Nov 30, 2019, 12:57 PM IST

திருச்சி எடமலைப்பட்டி புதூரைச் சேர்ந்தவர் சர்புதீன் (30). இவர் தனது முகநூலில் அல்கொய்தா இயக்கத்தின் பதிவுக்கு லைக் மற்றும் கமெண்ட் செய்திருந்தார். இதையடுத்து, இவருக்கு அல்கொய்தா இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக, கோவையில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், திருச்சியில் உள்ள சர்புதீன் வீட்டுக்குச் சென்ற புலனாய்வு அலுவலர்கள், அவரது கம்ப்யூட்டர், செல்போன், இ-மெயில், சமூக வலைதளம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

என்ஐஏ விசாரணை

அதன்பின் சர்புதீனையும், அவரது வீட்டிலிருந்த ஜாபர் என்பவரையும் விசாரணைக்காக அலுவலர்கள் அழைத்துச் சென்றனர். இதனால், எடமலைப்பட்டி புதூரில் பரபரப்பு நிலவியது.

ABOUT THE AUTHOR

...view details