திருச்சி கண்டோன்மெண்ட் நீதிமன்றம் ஐயப்பன் கோயில் அருகே உள்ள ரவுண்டானாவில் எம்ஜிஆர் சிலை உள்ளது. இன்று மதியம் இந்த எம்ஜிஆர் சிலைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் காங்கிரஸ் துண்டை போர்த்திவிட்டு சென்றுள்ளனர்.
எம்ஜிஆர் சிலைக்கு காங்கிரஸ் துண்டு... - தற்போதைய திருச்சி செய்திகள்
திருச்சி: எம்ஜிஆர் சிலைக்கு காங்கிரஸ் துண்டு போர்த்தப்பட்டதையடுத்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சிலைக்கு பாலாபிஷேகம் செய்தார்.
இந்தத் தகவலறிந்த காவல் துறையினர் விரைந்து வந்து காங்கிரஸ் துண்டை அகற்றினர். தொடர்ந்து அதிமுகவினர் எம்ஜிஆர் சிலை முன்பு திரண்டனர். சம்பவ இடத்திற்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் விரைந்து வந்து எம்ஜிஆர் சிலைக்கு தண்ணீர் ஊற்றிக் கழுவி, பாலபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் இந்த சம்பவத்தை செய்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இச்சம்பவம் காரணமாக திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.