திருச்சி:திருச்சி திமுக கூட்டணி கிட்டத்தட்ட சுமுகமாக முடிந்துவிட்டது எனக் கருதிய நிலையில் அருணாச்சலம் மண்டபத்தில் அதகளம் செய்திருக்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். திமுகவிற்கு எதிராகக் கூட்டம் போட்டு தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தவர்கள் எங்கள் பலம் எங்களுக்குத் தெரியும் என மார்த்தட்ட...
என்னதான் அக்கப்போரு என திருச்சி வேலுச்சாமியிடம் பேசினோம். "சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இதுவரை திருச்சி மாநகராட்சி எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. புனிதவல்லி பழனியாண்டி, சாருபாலா தொண்டைமான், சுஜாதா இப்படி நாங்கள்தான் ஆளுமையாக இருக்கிறோம்.
இவர்கள் மேயராக நாங்கள் ஆதரவளிக்கவில்லையா?
அட்லீஸ்ட் ஒரு கௌரவமான வார்டுகளையாவது ஒதுக்க வேண்டாமா, எங்களால் அவர்களுக்குப் பலம் அவர்களால் எங்களுக்குப் பலம். இதுகூட தெரியாத அமைச்சருக்கு நாலே நாலுவார்டுதானாம் எங்களுக்கு, என்ன அநியாயம்க இது!" என்று பொங்கித் தீர்த்துவிட்டார்.
இன்று திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் மீண்டும் பேசுவதாகக் கூறியிருக்கிறார். அவர்கள் எங்கள் வழிக்கு வரவில்லை என்றால் 65 வார்டுகளிலும் தனியாகப் போட்டியிடுவோம் என்பதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.