திருச்சி: மணப்பாறை அடுத்த கொட்டப்பட்டியைச் சேர்ந்தவர் பாஜக பிரமுகர் கண்ணன் (எ) அயோத்தி கண்ணன். இவர், தனது முகநூல் பக்கத்தில் நேற்று முன்தினம் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் உயிரிழந்த மற்ற இராணுவ வீரர்களுக்கும் இரங்கல் செய்தி பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவிற்கு அவரது முகநூல் நண்பர் கோபாலகிருஷ்ணன் என்பவர் பதில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், பிபின் ராவத் என்பவரால்தான் சீன ராணுவம் இந்தியப் பகுதியை ஆக்கிரமிப்பு செய்தார்கள் எனவும் மோடி சீன ராணுவத்தை விரட்டிவிட்டதாக இந்திய மக்களை ஏமாற்றி கொண்டு இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.