தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திருச்சி மாவட்ட அதிமுகவில் பதவிகளை பிடிக்க கடும் போட்டி - திருச்சி மாநகர செயலாளர்

அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரத்திற்கு இன்னும் ஒரு தீர்வும் எட்டப்படாத நிலையில், திருச்சியில் மாநகர செயலாளர் பதவிக்கு அக்கட்சி நிர்வாகிகள் இடையே பலமுனை போட்டி நிலவி வருகிறது.

திருச்சி அதிமுக
திருச்சி அதிமுக

By

Published : Jun 28, 2022, 10:08 AM IST

திருச்சி மாவட்டத்திற்கு அதிமுகவில் ஏற்கனவே, 3 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். இந்நிலையில், அவர்களில் ஒருவர் தற்போது ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகவும், மற்ற இருவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாகவும் உள்ள நிலையில் மாநகர செயலாளர் பதவிக்கு பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் அக்கட்சியின் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இதனிடையே திருச்சியில் மாநகர செயலாளர் பதவியைப் பிடிக்க வடக்கு, தெற்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்களும் அதே பதவியை தன்னிடம் தக்கவைக்க தற்போது பதவியில் உள்ள செயலாலரும் போட்டிப் போட்டுக் கொண்டு வருகின்றனர். இதனிடையே அக்கட்சியின் முன்னாள் துணை மேயர் ஸ்ரீனிவாசன், முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் ஆகிய இருவரும் இப்பதவியின் மீது தங்கள் பார்வையை திருப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் தலைமை பொறுப்பில் யார் இருப்பது என்ற பிரச்சனையே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், திருச்சியில் அதிமுக நிர்வாகிகளுடையே பதவிப் போட்டி ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வழக்கறிஞருடன் ஓபிஎஸ் ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details