திருச்சி: தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சுயநலத்துக்காக அழகிரியை ஏமாற்றியவர் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி - stalin
திருச்சியில் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சுயநலத்துக்காக அழகிரியை ஏமாற்றியவர் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி
இதுகுறித்து அவர், என்னை நச்சுத்தன்மையுடைய பாம்பு, பல்லி என ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், அவர் அவற்றையெல்லாம் விட நச்சுத்தன்மை வாய்ந்தவர். ஸ்டாலின் தனது சொந்த அண்ணன் அழகிரியை அரசியல் ஆதாயத்துக்காக ஏமாற்றி, கட்சியை விட்டு விலக்கச் செய்தார். இவர் எப்படி மக்களுக்கு நல்லது செய்வார். நான் விளையாட்டுக்க்கு சொல்லவில்லை, நீங்களே சிந்தித்துப் பாருங்கள் என்றார்.