திருச்சி மாவட்டம் மணப்பாறை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மார்க்கெட்டிலிருந்து, ஓட்டுனர் ஒருவர் வாகனத்தை, சாலையை நோக்கி பின்புறமாக இயக்கினார். அப்போது அந்த வாகனம், சாலையில் வந்துகொண்டிருந்த இருசக்கர வானத்தின் மீது மோதியது.
அதனால், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மற்றும் குழந்தை இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது சரக்கு வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.