தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட வருவாய் ஆய்வாளர் கைது

திருச்சி: வாரிசு சான்றிதழ் வழங்க 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட வருவாய் ஆய்வாளர் உள்பட இரண்டு அரசு அலுவலர்களை லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

arrested including revenue officer
arrested including revenue officer

By

Published : Jun 21, 2020, 4:02 AM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த தவளைவீரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவாஜிகணேசன். இவர் தனக்கு வாரிசு சான்றிதழ் கேட்டு மணப்பாறை தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார். இந்நிலையில், வாரிசு சான்றிதழ் வழங்க தனக்கு லஞ்சம் வேண்டும் என வருவாய் ஆய்வாளர் ஜோதிமணி கேட்டதாகத் தெரிகிறது.

இதுதொடர்பாக சிவாஜிகணேசன் திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினரிடம் புகார் அளித்ததின் பேரில், லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி கருப்பையா, லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அதிரடியாக தாசில்தார் அலுவலகத்திற்குள் புகுந்தனர்.

அப்போது வருவாய் ஆய்வாளர் ஜோதிமணிக்கு துணை போன தாசில்தார் தமிழ்கனியிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி, சிவாஜி கணேசனிடம் லஞ்சமாக பெற்ற 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தைப் பறிமுதல் செய்து, அவரைக் கைதுசெய்தனர்.

மேலும் வருவாய் ஆய்வாளர் ஜோதிமணி, அவருக்கு உதவிய கிராம அலுவலர் ராஜேஸ்வரி ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details