திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், மேரி தம்பதியின் குழந்தை சுர்ஜித். இவர் நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்தார்.
இதனை தொடர்ந்து ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சுஜித்தை மீட்க தீயணைப்புப் படையினர் 9 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கக் கோரி ட்விட்டரில் #savesurjith என்ற ஹாஷ்டேக் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.