தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பெண் கவுன்சிலரை கடத்தியதாக அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு! - போலீசார் தனிப்படை அமைத்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

மணப்பாறை கவுன்சிலர் செல்லம்மாளை கடத்திச்சென்றதாக, முன்னாள் அதிமுக எம்எல்ஏ சந்திரசேகர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் தனிப்படை அமைத்துத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

case
case

By

Published : May 24, 2022, 10:10 PM IST

திருச்சி: மணப்பாறை நகராட்சியில் 27 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடந்து முடிந்த நிலையில், அதில் அதிமுக 11 இடங்களிலும் திமுக 11 இடங்களிலும் வெற்றி பெற்றது. சுயேச்சையாக வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்த 5 பேர் அமைச்சர் கே.என்.நேருவை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை திமுகவுக்கு தெரிவித்தனர்.

இதன்காரணமாக திமுகவின் பலம் 16ஆக உயர்ந்த நிலையிலும், கடந்த மார்ச் 4ஆம் தேதி நடைபெற்ற நகர்மன்றத் தலைவருக்கான தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றது. அதனைத்தொடர்ந்து நகராட்சியில் நடைபெற்ற நகர்மன்ற துணைத்தலைவர் தேர்தல், குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் ஆகியவற்றை திமுகவினர் தொடர்ந்து புறக்கணித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி அதிமுகவைச் சேர்ந்த நகராட்சி 1ஆவது உறுப்பினர் செல்லம்மாள், 13ஆவது உறுப்பினர் வாணி ஆகியோர் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

இது மணப்பாறை நகர்மன்றத்தில் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே அதிமுவினர், நகர்மன்றக் கூட்டத்தை நடத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்ததோடு, உறுப்பினர்கள் கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்க திருச்சி மத்திய மண்டல ஐஜியிடம் புகாரும் அளித்தனர்.

இதனிடையே நாளை நகர்மன்றக் கூட்டம் நடைபெறும் நிலையில், இன்று(மே 24) காலை வீட்டில் இருந்த செல்லம்மாளை, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.சந்திரசேகர் உட்பட ஆறு அதிமுக நிர்வாகிகள் காரில் கடத்தி சென்றதாக செல்லம்மாளின் மகன் பிரபு, திமுக நிர்வாகிகளுடன் வந்து மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைத்து நகராட்சி உறுப்பினர் செல்லம்மாளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பொளந்துகட்டும் வெயில் - சக்கைபோடு போடும் குளிர்பான விற்பனை!

ABOUT THE AUTHOR

...view details