தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திருச்சி மாவட்ட பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு! - திருச்சி

திருச்சியில் நடைபெற்ற மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக விளம்பரப் பதாகை வைத்ததாக பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Case
Case

By

Published : Jun 8, 2022, 4:13 PM IST

திருச்சி: மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம், பாஜக சார்பில் திருச்சி புத்தூர் ரோடு பகுதியில் நேற்று(ஜூன் 8) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியின்போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை மேளதாளம் மற்றும் வாணவேடிக்கையுடன் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

மேலும் அண்ணாமலையை வரவேற்கும் வகையில் திருச்சி நால்ரோடு பகுதி முழுவதும், சாலையோரம் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. இக்கூட்டத்தில் திருச்சி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் வைத்தது, பயங்கர சத்தம் உள்ள வெடியினை வெடித்தது ஆகிய இரு பிரிவுகளின்கீழ் திருச்சி மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது உறையூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details