திருச்சி: மணப்பாறை பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி செல்லும் சாலையில் கம்பம் நோக்கி சென்ற அரசு பேருந்தும், திருச்சி நோக்கி சென்ற தனியார் பேருந்தும் வளைவு ஒன்றில் திரும்பும்போது உரசிவிடுமளவிற்கு இடைவெளி இருந்துள்ளது. இதனால் அரசு பேருந்து ஓட்டுநர் தனியார் பேருந்தை விலகிச் செல்ல அறிவுறுத்தியுள்ளார்.
பேருந்துகளை சாலையிலேயே நிறுத்தி விட்டு ஓட்டுநர்கள் வாக்குவாதம் ஆனால் தனியார் பேருந்தை ஒதுக்கி இயக்கும் அளவிற்கு இடம் இல்லாததால் தனியார் பேருந்து ஓட்டுநர் பேருந்தை சாலையிலேயே நிறுத்தி உள்ளார். இதனால் கோபம் அடைந்த அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்தை விட்டு கீழே இறங்கி காவல் நிலையம் நோக்கி சென்றார். அப்போது அவ்வழியே வந்த ஆம்புலன்ஸ் ஒன்று அரசு பேருந்தின் பக்கவாட்டு பகுதியின் வழியாக மருத்துவமனைக்கு சென்றது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் சரவணன் அரசு பேருந்தின் பக்கவாட்டு பகுதியில் பேருந்து செல்லும் அளவிற்கு இடம் இருந்ததை அறிந்து அரசு பேருந்து ஓட்டுநரிடம் பேருந்தை எடுக்கும்படி அறிவுரை கூறி போக்குவரத்தை சீர் செய்தார்.
சாலையின் பக்கவாட்டு பகுதியில் ஆம்புலன்ஸ் செல்லும் அளவிற்கு இடமிருந்தும் விட்டுக்கொடுக்காத அரசு பேருந்து ஓட்டுநரின் செயலால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால் சுமார் இருபது நிமிடங்களுக்கும் மேலாக திருச்சி திண்டுக்கல் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:நெடுஞ்சாலையில் சாகசம் செய்த புள்ளீங்கோக்கள் - பிடித்து 'வார்ன்' செய்த காவல்துறை!