திருச்சி: நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்துவரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுவருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் செப்.1ஆம் தேதி முதல்கட்டமாக, 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
அதைத்தொடர்ந்து நவம்பர் 1ஆம் தேதி முதல், 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவி ஒருவருக்கு கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “பள்ளிக்கல்வித்துறை 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பரில் அரையாண்டு தேர்வையும், அதைத்தொடர்ந்து மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வினையும் நடத்த முடிவு செய்துள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுமதி அளித்தவுடன் இதற்கான அறிவிப்பு வெளியாகும்” என்று பதிலுரைத்தார்.
இதையும் படிங்க:பெற்றோரும் பள்ளிக்கு வரலாம்... அமைச்சர் அதிரடி!