தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பாலியல் புகாரில் சிக்கிய பிஷப் கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட் - Bishop College professor suspended

பாலியல் புகாரில் சிக்கிய திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பாலியல் புகாரில் சிக்கிய பிஷப் கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்
பாலியல் புகாரில் சிக்கிய பிஷப் கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்

By

Published : Jun 30, 2021, 6:04 PM IST

திருச்சி: திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றி வந்தவர் பேராசிரியர் பால் சந்திரமோகன்.

பாலியல் ரீதியிலான சீண்டல்களை இவர் செய்ததாக முதுகலை முதலாமாண்டு மாணவிகள் சிலர் புகார் அளித்தனர். கல்லூரி நிர்வாகத்திடம் அளிக்கப்பட்ட இந்தப் புகார் குறித்து விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டது.

குழு மேற்கொண்ட விசாரணையில் மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டது உறுதியானது. இதனடிப்படையில் கல்லூரி நிர்வாகத்துக்கு விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்தது. இதைத் தொடர்ந்து பால் சந்திரமோகனை கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details