திருச்சி மாவட்டம் துவாக்குடியில் ஹைடெக் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் முலப்பொருட்களை பெல் நிறுவனத்திற்கு விற்பனை செய்வதாகக் கூறி போலியான ஆவணங்களை தயாரித்து துவாக்குடியில் உள்ள கனரா வங்கியில் 6 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளது.
வங்கி கடன் மோசடி: பெல் நிறுவன முன்னாள் இயக்குநர் மீது சிபிஐ வழக்குப்பதிவு - போலியான ஆவணங்கள்
திருச்சி: போலி ஆவணங்களை வைத்து கடன்பெற்றதாக பெல்நிறுவன முன்னாள் நிர்வாக இயக்குநர் உட்பட இருவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
சிபிஐ
இதனையறிந்த மதுரை மண்டல கனரா வங்கியின் மேலாளர் பரமசிவம், பெல் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரும் ஹைடெக் நிறுவனத்தின் பங்குதாரருமான மாணிக்கம் மற்றும் அவருடைய மனைவி மரகதம் மீது சிபிஐயில்புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, போலியான ஆவணங்களை சமர்ப்பித்து வங்கியை ஏமாற்றிய குற்றத்திற்காக இருவர் மீதும் மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Last Updated : Aug 6, 2019, 4:44 PM IST