தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'டெல்லியில் மீண்டும் பிரமாண்ட போராட்டம்' - அய்யாக்கண்ணு எச்சரிக்கை!

திருச்சி: "விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் டெல்லியில் மீண்டும் பிரமாண்ட போராட்டத்தை நடத்துவோம்" என்று, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு எச்சரித்துள்ளார்.

Ayyakannu

By

Published : Jun 2, 2019, 11:16 PM IST

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில பொதுக்குழு கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குபின் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், "அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்குதல் மற்றும் நதிகள் இணைப்பு குறித்து மத்திய அரசின் அறிவிப்பு வரவேற்கிறோம். விவசாயிகளின் மற்ற கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்ற வேண்டும். இதற்காக சங்கத்தின் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் என 100 பேர் இந்த மாத இறுதிக்குள் டெல்லிக்கு செல்ல இருக்கிறோம். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து எங்களது கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளோம். கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் டெல்லியில் பிரமாண்ட போராட்டம் நடத்தப்படும்.

காவிரியில் மாதந்தோறும் தண்ணீர் திறந்து விட வேண்டும் எனும் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால் கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். எட்டு வழிச் சாலை, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை எதிர்த்து தற்கொலை போராட்டம் நடத்துவோம். விவசாயிகளின் நிலத்தை அழித்து எட்டு வழிச் சாலை அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே உள்ள சாலைகளை அகலப்படுத்தலாம்" என்றார்.

அய்யாக்கண்ணு பேட்டி

ABOUT THE AUTHOR

...view details