தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடந்தது. இதில் அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு, மாநிலப் பொதுச்செயலாளர் பழனிவேல், மாநிலத் துணைத் தலைவர்கள் செந்தில், குமாரசாமி, முருகேசன், ஜாகிர் உசேன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
'எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிக்கே ஆதரவு' - அய்யாக்கண்ணு - விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு
திருச்சி: விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிக்கே எங்கள் ஆதரவு என்று விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிக்கே எங்கள் ஆதரவு -அய்யாக்கண்ணு
பின்னர் அய்யாக்கண்ணு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘எங்கள் சங்கம் எந்தக் கட்சியையும் சாராத சங்கம். நதிநீர் இணைப்பு, விவசாயப் பொருட்களுக்கு லாபகரமான விலை, கடன் தள்ளுபடி, இறக்குமதிக்கு தடை, அனைத்து விவசாயிகளுக்கும் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்குதான் ஆதரவு’ என தெரிவித்தார்.