திருச்சியில் அரசு மருத்துவக் காப்பீடுத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பேரணியை ஆட்சியர் சிவராசு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் மருத்துவ மாணவர்கள், நர்சிங் மாணவிகள், மருத்துவமனை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பேரணி - ஆட்சியர் சிவராசு கொடியசைத்து தொடங்கிவைத்தார்
திருச்சி: அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்த பேரணியில் மருத்துவ மாணவர்கள், நர்சிங் மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பேரணி
பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா வழியாக சென்று மத்திய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.
இதையும் படிங்க: 'காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் வரையிலான அறுவை சிகிச்சை'- மருத்துவர்கள் தகவல்!