தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் கரோனாவா?' - கிருமி நாசினி தெளிப்பு - Antiseptic Spray in Srirangam Ranganathar Temple

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ராஜகோபுரத்தில் கிருமி நாசினி கலந்த தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தூய்மை பணி
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தூய்மை பணி

By

Published : Mar 27, 2020, 8:22 PM IST

உலகம் முழுவதும் கரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்தியா முழுவதும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு 21 நாள்கள் அமலில் உள்ளது. மேலும் மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்த வகையில் திருச்சியில் மத்திய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, காந்தி சந்தை ஆகிய இடங்களில் உள்ள கட்டடங்கள், தரை உள்ளிட்டவற்றில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ராஜகோபுரத்தில் தீயணைப்புத்துறை வாகனம் மூலம் கிருமி நாசினி கலந்த தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு தூய்மை பணி நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தூய்மை பணி

பின்னர், ராஜகோபுரத்திற்கு அருகில் உள்ள கடைகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை, அம்மா உணவகம் உள்ளிட்ட இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளில் தீயணைப்புத் துறையினருடன் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: 'காதலியைக் காண முகாமிலிருந்து தப்பியோடினேன்’

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details