திருச்சி:டாக்டர் அம்பேத்கரின் 131ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மத்திய பேருந்து நிலையம் அரிஸ்டோ ரவுண்டானா அருகே உள்ள அவரது திருவுருவசிலைக்கு திமுக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து அவர் தில்லை நகரில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்திலும் அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.