தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மகளுக்கு சைக்கிள் ஓட்டப் பழகி கொடுத்த வழக்கறிஞர் வெட்டிப் படுகொலை - Trichy district news

திருச்சி: அடையாளம் தெரியாத நபர்களால் வழக்கறிஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

திருச்சியில் வழக்கறிஞர் வெட்டி படுகொலை
திருச்சியில் வழக்கறிஞர் வெட்டி படுகொலை

By

Published : May 9, 2021, 10:04 PM IST

Updated : May 9, 2021, 10:18 PM IST

திருச்சி பீமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் கோபி கண்ணன். இவர் இன்று இரவு சுமார் 7 மணி அளவில் வீட்டின் அருகே தனது குழந்தைக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத ஆறு பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பியோடினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி நீதிமன்ற காவல் நிலையம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கறிஞரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Last Updated : May 9, 2021, 10:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details