இதுகுறித்து அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்படும் கட்டடங்களில் சம்பந்தப்பட்ட உறுப்பினரின் பெயர் எழுதப்படும். இந்த வகையில் 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை உறுப்பினராக நான் இருந்தேன். அப்போது திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் பகுதிகளில் கட்டப்பட்ட கட்டடங்கள், பயணிகள் நிழற்குடை களில் எனது பெயர் எழுதப்பட்டு இருந்தது.
பயணிகள் நிழற்குடையில் பெயரை அழிப்பதா? இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட பழனியாண்டி வெற்றி பெற்றார். அந்தநல்லூர் ஒன்றியத்தில் உள்ள மருதாண்ட குறிச்சி, ஏகிரி மங்கலம், சாத்தனூர் ஆகிய கிராமங்களில் எனது பதவிக்காலத்தில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையில், எனது பெயரை அழித்துவிட்டு பழனியாண்டி தனது பெயரை எழுதுகிறார். இது கண்டிக்கத்தக்கது.
இது ஆளுங்கட்சியின் அராஜக செயலாகும். இதில் உள்ள நியாயங்களை மக்கள் விரைவில் உணர்வார்கள்" என அறிக்கையில் பரஞ்சோதி குறிப்பிட்டுள்ளார்.