தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பிறப்பு முதல் இறப்பு வரை லஞ்சம்! பட்டியல் வெளியிட்ட கமல்! - பிறப்பு முதல் இறப்பு வரை லஞ்சம்

திருச்சி: தமிழ்நாட்டில் பிறப்பு முதல் இறப்பு வரை லஞ்சம் கொடுக்க வேண்டியிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள கமல் ஹாசன், அதுகுறித்த விலைப்பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.

kamal hasan
kamal hasan

By

Published : Dec 28, 2020, 1:23 PM IST

திருச்சியில் இன்று மூன்றாம் கட்ட பரப்புரையில் ஈடுபடவுள்ள மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன், முன்னதாக தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது லஞ்சப்பட்டியல் ஒன்றை வெளியிட்டபின் பேசிய அவர், “ பல தடைகள், அனுமதி மறுப்பு அனைத்தையும் கடந்து, செல்லும் இடமெல்லாம் மக்கள் எழுச்சியை பார்க்க முடிகிறது. அரசு மீது நான் கூறும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு, முதலமைச்சர் மாற்றுக்கருத்துதான் கூற முடியும். மறுக்க முடியாது.

அதற்கான பட்டியல்தான் இது. தொட்டில் முதல் சுடுகாடு வரை லஞ்சத்திலேயே தமிழகம் எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கான ரேட் கார்டு இது. அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை பெண் என்றால், ரூ.300 ம், ஆண் பிள்ளை என்றால் ரூ.500 ம், பிறப்புச் சான்றிதழ் பெற ரூ.200 ம், சாதி சான்றிதழுக்கு பெண்ணுக்கு ரூ.500, ஆணுக்கு ரூ.3000. ஆர்டிஓ அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் வாங்க பெண்களுக்கு ஆயிரம் ரூபாய், ஆண்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் என லஞ்சம் வாங்கப்படுகிறது.

அதேபோல், பாஸ்போர்ட், குடும்ப அட்டை, பத்திரப்பதிவு, பட்டா பரிவர்த்தனை, சொத்து வரி, மும்முனை மின் இணைப்பு, தண்ணீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, ஓய்வூதியம், விதவை உதவித்தொகை, பிண அறை, இறப்புச்சான்றிதழ் என அனைத்திற்கும் ஒவ்வொரு லஞ்ச விலை. இந்த லஞ்சப் பட்டியலை ஆளுநரிடம் கொடுப்பதாக இல்லை. பத்திரிக்கையாளர்களுக்கு மட்டும் தான். மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் இந்த நிலை கண்டிப்பாக மாறும்.

பிறப்பு முதல் இறப்பு வரை லஞ்சம்! பட்டியல் வெளியிட்ட கமல்!

இரட்டை இலைக்கு ஊரு விளைவிப்பது ஆளுங்கட்சி தான். தற்போது பெரியார், எம்ஜிஆர் குறித்து பேசி வரும் நான், தருணம் கிடைக்கும் போது கருணாநிதி குறித்தும் பேசுவேன். இட ஒதுக்கீடு இருக்க வேண்டும். அதேநேரம் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்ப்பவன் நான். ஆட்சிக்கு வந்து இந்நிலையை மாற்றுவோம். மக்கள் நீதி மய்யமும் திராவிடக் கட்சி தான். தமிழ் பேசும் அனைவரும் திராவிடர்கள் தான் “ என்றார்.

இதையும் படிங்க: குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள் - வைகோ அறிவுரை

ABOUT THE AUTHOR

...view details