தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திருச்சியில் நடைபெறும் துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் - shooting competition

திருச்சியில் நடைபெற்று வரும் 47-ஆவது மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்றுள்ளார்.

திருச்சியில் நடைபெறும் துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித்
திருச்சியில் நடைபெறும் துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித்

By

Published : Jul 27, 2022, 12:14 PM IST

திருச்சி: மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள் கிளப் உள்ளது. இங்கு 47-ஆவது மாநில துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 24 ஆம் தேதி தொடங்கிய போட்டிகள் 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் இருந்து 1,200 போட்டியாளர்கள் பங்கு பெறுகின்றனர்.

10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் அளவில் போட்டிகள் நடைபெறுகின்றன. மேலும், 16 வயது சப்-யூத், 19 வயது யூத், 21 வயது ஜூனியர், 22 - 45 வயது சீனியர், 46 - 60 வயது சீனியர் மாஸ்டர் ஆகிய பிரிவின் கீழ் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சியில் நடைபெறும் துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித்

இன்று (ஜூலை 27) நடைபெறும் இந்த போட்டியில் ஓய்வு பெற்ற டிஜிபிக்கள் விஜயகுமார் மற்றும் தமிழ்ச்செல்வன், நடிகர் அஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக கார் மூலம் நடிகர் அஜித் திருச்சி வந்தார். அதனைத்தொடர்ந்து 4 பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்கிறார்.

இன்று (ஜூலை 27) காலை ரைபிள் கிளப்புக்கு வந்த அவர், சீனியர் மாஸ்டர் பிரிவில் கலந்து கொண்டார். அஜித் வருகையை முன்னிட்டு ரைபிள் கிளப்பில் டைட் செக்யூரிட்டி பாதுகாப்பு போடப்பட்டு உள்ளே யாரும் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

இதையும் படிங்க:நிர்வாண புகைப்படம்: ரன்வீர் சிங் மீது எப்.ஐ.ஆர் பதிவு

ABOUT THE AUTHOR

...view details