திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்குச் செல்லவிருந்த ஸ்கூட் விமானம், புறப்படத் தயாராக இருந்தது. இதில் பயணிக்க இருந்த பயணிகளை, விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.
ரூ.10.24 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல்!
திருச்சி: திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில், வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட 10 லட்ச ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய, வெளிநாட்டுப் பணத்தை சுங்கத்துறை அலுவலர்கள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
10.24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல்
அப்போது, காரைக்காலைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவரது உடைமையில் 10.24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர், யூரோ, ஸ்டெர்லிங், கத்தார், ரியால் உள்ளிட்ட வெளிநாட்டு பண நோட்டுகள் மறைத்துக் கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவற்றைக் கைப்பற்றிய சுங்க காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.