திருச்சி:என்ஐடி கல்லூரியில் விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசம் மாநிலம், குல்னா பாகர் ஹாட், சோலார் கோலா, காலிஷ் காலானியைச் சேர்ந்த பாலுப்சன் மகன் சௌரவ்சன் (23). இவர் திருச்சி என்ஐடி கல்லூரி விடுதியில் தங்கி கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் - பிடெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், கல்லூரிக்குக் கடந்த மாதம் 4ஆம் தேதி தான் கரோனா விடுமுறை முடிந்து வந்துள்ளார். சௌவ்ரசனுடன் தங்கியிருந்த சக மாணவர்கள் வெளியே சென்று விட்டு மீண்டும் அறைக்கு வந்த போது, அறையின் உள்பக்கம் தாழிட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.
துவாக்குடி காவல்துறை விசாரணை