திருச்சி: மணப்பாறை அடுத்த மங்களமேடு பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் பிரகாஷ் (17). அரநிலை பாளையத்திலுள்ள அரசு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தநிலையில், நேற்று டிசம்பர் 05 ஆம் தேதி பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் எசனஉடை குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது, குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்ற மாணவன் நீருக்குள் மூழ்கி தத்தளித்துள்ளான்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவர்கள், அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளனர். கூச்சல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், உயிரிழந்த நிலையில் சிறுவனை மீட்டனர்.