திருச்சி மாவாட்ட முசிறி கிராமத்தில் உள்ள பொதுப் பாதைகளை சிலர் ஆக்கிரமித்து இருப்பதாகக் கூறி, ராமச்சந்திரன் என்பவர் மாவாட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
பொதுப்பாதை ஆக்கிரமிப்புக்கு எதிராக தனிநபர் தர்ணா போராட்டம்! - dharna
திருச்சி: பொதுப்பாதை ஆக்கிரமிப்பு பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனிநபர் ஒருவர் தர்ணாவில் ஈடுபட்டார்.
இதுப்பற்றி அவர் தெரிவித்ததாவது, " பொதுப் பாதைகளை சிலர் ஆக்கிரமித்தது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் நூறு தடவைக்கும் மேல் மனு கொடுத்து விட்டேன். ஆனால் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.பொதுப் பாதைகள் ஆக்கிரமிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது, இந்த போக்கை கண்டிக்கும் விதமாத தனி நபராக இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டேன்" என தெரிவித்தார்.
மாவாட்ட அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைப்பெற்று கொண்டிருந்ததால், போராட்டத்தில் ஈடுபட்ட ராமச்சந்திரனை காவல்துறையினர் சமரசம் செய்து, பின்னர் ஆட்சியரிடம் அழைத்துச் செல்லப்பட்டு மனுவை கொடுத்தார்.