திருச்சி காந்தி மார்க்கெட் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் படையப்பா. இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக காந்தி மார்கெட் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. பின் படையப்பாவின் வீட்டுக்கு சென்று காவல் துறையினர் சோதனை மேற்கொண்டபோது, வீட்டில் மறைத்து வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், படையப்பாவை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துவந்தனர்.
இதனையறிந்து காவல் நிலையத்திற்கு வந்த படையப்பாவின் தாய் தமிழ்ச்செல்வி திடீரென மண்ணெண்ணெயை தனது உடல்மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டு காவலர்களை கண்டித்து கோஷமிட்டார். உடனடியாக காவலர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து தமிழ்ச்செல்வியை மீட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.